சனி, 8 ஆகஸ்ட், 2015

ஒரு மாவட்டதிற்கான ஆசனப்பங்கீடு - ஒரு விளக்கம்

பாராளுமன்ற மொத்த ஆசனங்கள் -225
தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படுபவை -196
தேசியப் பட்டியல் - 19

மாவட்ட ரீதியான ஆசனப்பங்கீடு

(1) மாவட்டத்தில் வெற்றியீட்டிய கட்சிக்கு - 1 மேலதிக ஆசனம்
(2) செல்லுபடியான மொத்தவாக்குகளில் 5% இற்கு குறைவாகப் பெற்ற கட்சிக்கு ஆசனம் ஏதும் கிடைக்காது...
(3) மாவட்டத்திற்கான மொத்த ஆசனங்களில் ஒன்று போக மீதி பங்கிடப்படும்.
(4)  செல்லுபடியான மொத்தவாக்குகளில் 5% இற்கு குறைவாகப் பெற்ற கட்சிகளின் வாக்குகள் கழிக்கப் பட்டு ஒரு ஆசனதிற்கு தேவையான வாக்குகள் கணிக்கப்படும்..

உதாரணம்: 
திகாமடுல்ல மாவட்டம்(7 ஆசனங்கள்)

மேலதிக ஆசனம் ஒன்று போக பங்கிடப்படும் ஆசனங்கள் 6.
மொத்த செல்லுபடியான வாக்குகள்(2014) : 256,946

கட்சி வாக்குகள் வீதம்
ஐ.ம.சு.கூ. 132,096 51.41%
ஐ.தே.க. 90,757 35.32%
இ.த.அ.க. 26,895 10.47%
ஏனையவை 7,198 5% இலும் குறைவு

அதிகூடிய வாக்குகளைப் பெற்ற கட்சி ஐ.ம.சு.கூ 1 மேலதிக ஆசனத்தைப் பெறுகிறது.

கட்சி ஆசனங்கள்
ஐ.ம.சு.கூ. 01
ஐ.தே.க. 0
இ.த.அ.க. 0
தொடர்புடைய வாக்குகள் =செல்லுபடியான வாக்குகள் - 5% இலும் குறைவான கட்சிகள் பெற்ற வாக்குகள் 

தொடர்புடைய வாக்குகள் = 256,946 - 7,198 = 249,748 ஒரு ஆசனத்திற்கு தேவையான வாக்குகள் = 249,748/6 = 41, 625 ஆகவே கட்சிகள் பெறும் ஆசனங்கள்
கட்சி ஆசனங்கள் எஞ்சிய வாக்குகள்
ஐ.ம.சு.கூ. 01+03=04 7,222
ஐ.தே.க. 0+02=02 7,508
இ.த.அ.க. 0+0 26,895
மொத்தமாக 6 ஆசனங்கள் பங்கிடப்பட்டுவிட்டன. ஆனால் ஒரு ஆசனம் எஞ்சி இருக்கிறது..
அது எஞ்சிய வாக்குகளில் அதிகம் பெற்ற கட்சிக்கு வழங்கப்படும்.
அந்த வகையில் இ.த.அ.க. க்கு எஞ்சிய ஒரு ஆசனம் கிடைக்கும்..

இறுதி ஆசன நிலவரம்
கட்சி ஆசனங்கள்
ஐ.ம.சு.கூ. 4
ஐ.தே.க. 2
இ.த.அ.க. 1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக