புதன், 26 அக்டோபர், 2011

ஏழாம் அறிவு - VCD விமர்சனம்
















1600 வருடத்திற்கு முன்பு 1600 வருடத்திற்கு முன்பு போதிதர்மன் என்னும் இளவரசன் இருந்தான் (தற்காப்பு கலை மற்றும் மருத்துவத்தில் திறமைசாலி )அவன் காஞ்சிபுரத்தை சார்ந்தவன் சீனாக்கு செல்கிறான்.பிறகு சீனா கிராமத்தில்வித்தியாசமான நோய் தாக்குகிறது.பின்னர் சூர்யா அந்த நோயை குணப்படுத்தஉதவி புரிகிறார்.அந்த கிராமத்தினர்சூர்யாவை கடவுளாக பார்கின்றனர். பின்னர் ஒரு குதிரைபடையுடன் சிலர் அந்த கிராமத்தை தாக்குகின்றனர்அவர்களிடமிருந்தும் காப்பாற்றும் போதிதர்மன் தற்காப்புகலையை அவர்களுக்கு கற்பித்து பின் தான் இந்தியாசெல்வதாக கூறுகிறான்.அந்த கிராமத்து வாசிகள்அவனுக்கு விஷம் கொடுத்து சாகடிகின்றனர் (அவன் உடல்அவர்கள் பூமியில் புதைக்கபட்டால் அந்த கிராமத்திற்குஎந்த நோயும் வராது )அவர்களின் எண்ணம் புரிந்த போதிதர்மன் அந்த விஷத்தை தெரிந்தே குடிக்கிறான்.அங்கு தான் தற்காப்பு கலை மற்றும் மருத்துவம் சீனாவில் வளர்கிறது.

இத்தோடு போதிதர்மன் கதை க்ளோஸ்...

 சூர்யா ஒரு சர்கஸ் நிபுணர். அவர் ஸ்ருதி ஹாசன் மேல் காதல் கொள்கிறார்..ஸ்ருதி ஹாசன் ஒரு விஞ்ஞானி(உண்மையா இப்படி ஒரு லவ் செட் ஆகும்). ஸ்ருதி ஹாசனும் காதல் கொள்கிறார் (வேற வழி இல்ல கத போகணும்ல ) கொஞ்ச நாள் சென்று சூர்யாவின் கிராமத்து ஆட்களின் மூலமாக சூர்யா,ஸ்ருதி தன்னை ஒரு வருடமாக பின் தொடர்வதை தெரிந்து கொள்கிறார். அப்புறமா ஏன் என்னும் காரணத்தை ஸ்ருதியிடம் கேட்கிறார் சூர்யா. அதற்கு ஸ்ருதி ,சூர்யா போதிதர்மன் பரம்பரையை சார்ந்தவர் எனவும்அவரின் ஆராய்ச்சியில் போதிதர்மனின் சக்தியை இந்த சூர்யாவிற்கு கொண்டு வர முடியும் என சொல்கிறார்.

அதற்குள் வில்லன் டாங் ஒரு நாய்குள் எதையோ செலுத்துகிறார் அப்புறம் அவன் கண்களின் சக்தியை கொண்டு அங்கிருக்கும் போலீசை துவம்சம் செய்கிறார்.  சூர்யாவையும் ஸ்ருதியையும் துரத்துகிறார். சூர்யாவும் ஸ்ருதியும்அவன் சீனா அரசால் அனுப்பி வைக்கப்பட்டதை கண்டுபிடிக்கிறார்கள். அவன் ஒரு நோயை நாய் மூலம் நாட்டுக்கே பரவ விடுகிறான். அப்போது தான் இந்திய நாடு தவிக்கும் போது சீனாவால் மருந்து தயாரித்துகொடுக்க முடியும் (விற்கவும் முடியும்) - இது எப்டினா (போதிதர்மன் அவர்களுக்கு அதற்கான மருந்தை செய்வது எப்டி என கற்றுகொடுத்திருக்கிறான் அல்லவா..)அதனால சூர்யாவையும் ஸ்ருதியையும் கொன்னுட்டா அந்த மருந்த சூர்யா மூலமா ஸ்ருதி தயார் பண்ண முடியாது. 

அப்புறம் ஸ்ருதி தன ஆராய்ச்சி மூலமாக சூர்யாவை போதிதர்மனாக மாற்ற தயார் செய்கிறாள் அங்கே வரும் டாங் சூர்யாவை கிட்டத்தட்ட சாவும் நிலைக்குதள்ளினாலும் அந்த நேரத்தில் போதிதர்மன் ஆக்டிவேட் ஆகி டாங்கை கொல்கிறான்....(ஏழாம் அறிவு முடிஞ்சு போச்சு பா இதோட)

சூர்யா - இவர் தான் இந்த படத்தின் தூண்.சர்கஸ் காட்சிகள் மிக குறைவாக இருப்பதால் அங்கே அவ்வளவு விஷயம் இல்லை.ஆக்சன் தான் பயங்கரமா பின்னிருக்கார் மனிதர்.அதுவும் கிளைமாக்ஸ் ல செமையா தூள் கிளப்பிருக்கார் - ஒரு உண்மையான தற்காப்பு கலை நிபுணர் போல. 

ஸ்ருதி - இரண்டாம் ஹீரோ மாதிரி வேடம் இவருக்கு.அவர் அதை நன்றாக பயன்படுத்தியும் இருக்கிறார்.நல்ல எதிர்காலம் இருக்கு ம உனக்கு...! 

படத்துல மிக மிக முக்கியமான ஆள் வில்லன் தான் ... என்ன ஒரு மிரட்டலான கண்ணு இவருக்கு.இவரு ஆக்சன் பாத்துட்டே இருக்கலாம் போல இருக்கு..நல்ல தேர்வு.

படத்தை பற்றி கொஞ்சம் பார்ப்போம்: முதல் பதினைந்து நிமிடம் - பதினைந்து கோடி ( ஒரு நிமிஷம் ஒரு கோடி (எங்கேயும் எப்போதும் படத்தோட பட்ஜெட்)அது கண்டிப்பா நிறைவா பிரமாண்ட படுத்தி எடுத்துருக்காங்க..வாழ்த்துக்கள்..! படத்தை பார்க்கும் அனைவரும் ரசிக்க முடியும் அந்த வரலாறு படைப்பை..! 

அப்புறம் படம் ஆரம்பிக்கும் ...முதல் பாதி பார்க்காம படத்தை பார்த்தால் மிக்க நலம்.ஏன் என்றால் அதில் நாலு பாட்டு அதுல மூணு தேவையே இல்லா மமுதல் பாட்டு சீனப்பாட்டு..அப்புறம் ரிங்க ரிங்கா..அப்புறம் டீ குடிக்கும் காப்ல முன் அந்தி பாடல் ... அப்புறம் ஒரிரு நிமிடங்களில் எம்மா எம்மா?முருகதாஸ் போன்ற இயக்குனர்கள் இப்படி பாடல்களை தேவை இல்லாமல் வைப்பது படத்தின் மேல் தானே வெறுப்பை கொண்டு வருகிறது.

 இரண்டாம் பாதி தான் படத்தின் பக்க பலம்.ஒவ்வொரு நிமிடமும் விறுவிறுப்பு.அடுத்த நிமிடத்தை நோக்கி நாம் செல்வதை உணரவைக்கும் வேகம்.வில்லன் ஹீரோ,ஹீரோயினை துரத்துவது தவிர தசாவதாரத்திற்கும் அதே கதையோடு வந்திருக்கும் இந்த படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

படத்தில் வரும் சண்டைக்காட்சிகள் தான் மிகவும் என்னையும் இனி பார்க்க போகும் உங்களையும் கவரும் ஒரு விஷயம். இந்த படத்தின் நோக்கு வர்மம்கலை அதாவது ஒருவரின் மூளையை நம் பார்வையை கொண்டு இயக்குவது.இது படத்தில் போதிதர்மனாலும் வில்லனாலும் அடிக்கடி படத்தில் யூஸ் பண்றாங்க.

படத்துல நம்மைப் போன்ற ஆட்கள் நம்ப முடியாத ஒரு சீன்.ரோட்டில் வண்டியை ஓட்டும் மனிதரின் மூளையை வில்லன் இயக்குவது.நம்ப முடியலனாலும் ஏற்கனவே நம்ப முடியாத நிறைய சீன் பாத்த நமக்கு இத நம்பிடலாம்.

மொத்தமாக ஏழாம் அறிவு நம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கிறது ஆனால் முதல் பாதியை தவிர்த்து...!

இரண்டாம் பாதிக்காக தான் இந்த படத்துக்கே மார்க் போடுவாங்க..!

கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒரு தமிழ் மற்றும் இந்தியப் படம்


நன்றி - குரு

வேலாயுதம் - VCD விமர்சனம்





சமூக அநீதிகளை அழிக்கஒரு கற்பனைக் கதாபாத்திரம் உண்மையாக அவதரித்தால்?இதுதான் வேலாயுதத்தின் ஒன் லைன்
திருப்பாச்சிகந்தசாமியை கலந்து கட்டி அடித்திருக்கிறார்கள். விஜய் ஹீரோ என்பதால்பாகிஸ்தான் தீவிரவாதிகள் டெல்லிமும்பை தாண்டி நேராக சென்னைக்கே வருகிறார்கள். தமிழகத்தின் பொற்கால ஆட்சியை சீர்குலைக்க பல இடங்களில் வெடிகுண்டு வைக்க திட்டமிடுகிறார்கள். இவற்றையெல்லாம் முறியடிக்க பத்திரிகையாளரான ஜெனிலியா வேலாயுதம் எனும் ஒரு கற்பனை கதாபாத்திரத்தை உருவாக்குகிறார். அதே நேரத்தில் தங்கை திருமண விஷயமாக சென்னை வருகிறார் விஜய். எதேச்சையாக இரண்டு டைம்லைன்களும் சங்கமிக்க விஜய் வேலாயுதமாக மாறி சமூக அநீதிகளை எப்படி அழிக்கிறார் என்பதுதான் படம்.
சரியான கதாபாத்திர தேர்வுகள். சரண்யா மோகன்ஹன்ஷிகாசந்தானம் என்று அனைவரும் முதற்பாதியை அலுப்புத்தட்டாமல் நகர்த்தியிருக்கிறார்கள். தங்கைக்காக விஜய் செய்யும் சேட்டைகள்பணத்தைத் திருட சந்தானத்தின் முயற்சிகள் என்று முதற்பாதி முழுவதும் சிரிப்பலைகள். வேலாயுதம்போகிறபோக்கில் தீவிரவாதிகளின் சில திட்டங்களை முறியடித்துச் செல்கிறார். மக்களுக்கு வேலாயுதம் யார்என்ற எதிர்பார்ப்பு மேலோங்குகிறது. இடைவேளை.
ஆறாம் அறிவை ஆப் செய்து விட்டு உட்கார்ந்தால் இரண்டாம் பாதி சூப்பர்ஆஹா ஓஹோ. வில்லன்களைப் பின்னுகிறார் வேலாயுதம். கள்ளநோட்டுகளை அழிக்கிறார்அணு உலைக்குள் பாயவிருக்கும் ரயிலை சடன் பிரேக் போட்டு நிறுத்துகிறார்,சிட் பண்ட் மோசடிப் பணத்தை மீட்டுக் கொடுக்கிறார்என இரண்டாம் பாதி முழுக்க வேலாயுதத்தின் அட்டூழியங்கள்சாரி அற்புதங்கள். இந்தப் பகையில் தங்கை இறந்து விட,அதற்குக் காரணமான வில்லன்களை வேலாயுதம் எப்படி பழி தீர்க்கிறார் என்பது மீதிக்கதை.

















பாடல்கள்காமெடி,சென்டிமென்ட் என்று அனைத்தும் சரியாகப் பொருந்தி வருவது படத்திற்கு பெரிய பலம். கத்திப் பேசுவது,சவால் விடுவதுஜம்ப் பண்ணுவது என்று வழக்கமான விஷயங்கள் இல்லாமல் விஜய் யதார்த்தம்ஜோடி ஹன்ஷிகா செம பதார்த்தம். ஜெனிலியா வந்த வேலையை சரியாக செய்திருக்கிறார். கொஞ்ச நேரமே வந்தாலும் சந்தானம் கலக்கியிருக்கிறார்.
இரண்டாம் பாதியில்லாஜிக் மீறல்கள் தான் படத்தின் ஒரே மைனஸ். சூப்பர் ஹீரோ கதை என்பதால் கொஞ்சம் சகித்துத் தான் ஆக வேண்டும். ஆண்டவன் இருக்கானோ இல்லையோவேலாயுதம் இருக்கான்” போன்ற மக்கள் வசனங்கள்ஸ்ஸ்ஸப்பா முடியல. முதல் முறையாக சிக்ஸ் பேக் காட்டி சண்டை போட்டிருக்கிறார் விஜய்நோ கமெண்ட்ஸ்.
ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் கோபம்தான் வேலாயுதம் என்று கருத்து சொல்லியிருக்கிறார்கள். நீங்களும் வேலாயுதம் நானும் வேலாயுதம் என்பதால்ஒருமுறை நண்பர்களோடு/குடும்பத்தோடு படத்தை பார்த்து விடுவது நல்லது. தனியாக சிக்கினால் கம்பெனி பொறுப்பல்ல.

நன்றி - குரு

சனி, 8 அக்டோபர், 2011

கல்முனை மாநகர சபை - உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகள் 2011


உள்ளூராட்சி சபைத் தேர்தலின் மூன்றாம் கட்ட வாக்குகள் எண்ணப் பட்டுக் கொண்டிருக்கும் இவ்வேளையில் கல்முனை மாநகர சபையின் அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்டு விட்டன. அதனடிப்படையில் முஸ்லிம் காங்கிரஸ் சபையைக் கைப்பற்றி உள்ளது. இம்முடிவுகளை தேர்தல் வரலாற்றில் முதன் முதலாக மிக விரைவாக அறியத் தந்தது வில்லொளி என்பது குறிப்பிடத்தக்கது.

இதோ இறுதி முடிவுகள் - 2011
கல்முனை மாநகர சபை 

மு.கா - 22317 - 11 ஆசனங்கள்
த. தே. கூ - 10120 - 4 ஆசனங்கள்

ஐ.ம.சு.கூ - 8503 - 3 ஆசனங்கள்
ஐ. தே .க - 2873 - ஒரு ஆசனம்


இம்முடிவுகளை மிக விரைவாக அறிவதற்கு உதவி செய்த நண்பர்கள் அனைவருக்கும் வில்லொளியின் மனமார்ந்த நன்றிகள்

வியாழன், 28 ஜூலை, 2011

வேதன அதிகரிப்பும் வேதனை அதிகரிப்பும்

இரண்டு மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தின் (FUTA) தொழிற்சங்க நடவடிக்கை  ஓரளவு எதிர்பாராத விதமாக, கடந்த வாரம் தற்காலிக முடக்கத்திற்கு கொண்டுவரப்பட்டிருக்கிறது. என்றாலும், சில தினங்களுக்கு முன்னர் கொழும்பில் ஒரு பத்திரிகையாளர் மாநாட்டில் உரையாற்றிய பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கங்கள் தலைவர் டாக்டர் நிர்மல் ரஞ்சித் தேவசிரி அவர்கள், தொழிற்சங்க பிரச்சினைகளை அரசாங்கம் கையாளும் வழி பற்றி தாம் நன்கு அறிந்திருக்கின்றோம் என்று தெரிவித்துள்ளார். இரண்டரை மாதகாலமாக மிகத் தீவிரமாக கடைப்பிடிக்கப்பட்டு வந்த தொழிற்சங்க நடவடிக்கை, சடுதியாக நிறைவுற்றமையும், FUTA தலைவரின் இக்கூற்றும் உண்மையில் கல்வியாளர்களின் நியாயமான போராட்டம் வெற்றி அடைந்துவிட்டதா..? அல்லது இக்கட்டு நிலையை(Stalemate) அடைந்து விட்டதா என இரு வேறான ஐயங்களை எழுப்பியுள்ளது.


 இலங்கையின் உயர்கல்வித்துறையை எடுத்து நோக்கும்போது அது முக்கியமாக ஆராய்ச்சிபோதனை, சமூக சேவை என்ற மையக் குறிக்கோள்களைக் கொண்டுள்ளது.  சமூகத்திற்கு ’வேலைத்திறனுடைய’, ‘கேள்வியுள்ள’ பட்டதாரிகளை அனுப்புவதில் பல்கலைக்கழகங்களும், கல்வியாளர்களும் பங்காற்றி வருகின்றனர். கல்வியாளர்களின் இந்த தொழிற்சங்க நடவடிக்கையானது வெறுமனே பல்கலைக் கழக மாணவர்களுக்கான பாதிப்பு மட்டுமில்லை என்பதை பலர் உணராதவர்களாக காணப்படுவது மிகுந்த வேதனையளிக்கின்றது. இந்நடவடிக்கையினால், ஏனைய பணிகளுக்கான செயற்திறன் மிக்க பணியாளர்கள் வருவதும் தாமதப் படுத்தப்படும் என்பதை நாம் அனைவரும் கவனத்தில் எடுக்க வேண்டும்.

ஏனைய தொழிற்சங்க நடவடிக்கைகளைப் போன்று இது வெறுமனே வேதன அதிகரிப்புக்கான போராட்டம் அல்ல என்பதைப் பலர் விளங்கிக் கொள்ள மறுக்கின்றனர். எனவேதான், இத் தொழிற்சங்க நடவடிக்கை முற்றுப் பெற்றதாக அறிவிக்கப்பட்டது முதல் கல்வி சாராத ஊழியர்களின் தொழிற்சங்க நடவடிக்கையொன்று நடைபெறப் போவதாக கதையொன்று பரவி வருகின்றது. கல்வியாளர்களுள் முதுநிலைப் பேராசிரியர்களின் எண்ணிக்கை இலங்கையில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே காணப்படுகின்றது. முதுநிலை பேராசிரியர்களின் இந்த எண்ணிக்கை வீழ்ச்சியானது அவர்களின் பிறநாட்டு வெளியேற்றத்தினால் ஏற்பட்டதாகக் கூறப்படுகின்றது. இவ்வாறான இவர்களின் இந்த வெளியேற்றத்திற்கு, கல்வியாளர்களுக்கு மிகக் குறைந்த வேதனம் வழங்கும் நாடாக, அதுவும் எத்தியோப்பியா போன்ற பின் தங்கிய நாடொன்றிலும் பார்க்க குறைந்த வேதனம் வழங்கும் நாடாக இலங்கை விளங்குகின்றதும் ஒரு காரணமாகலாம்.
இப்படி இத்தொழிற்சங்கப் போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் விதமாக பல கட்டுரைகள் கடந்த சில வாரங்களாக வெளிவந்திருந்தன. எனினும் இன்னமும் பல ஊடகங்கள் இத்தொழிற்சங்கப் போராட்டத்தின் உண்மைத்தன்மையை வெளிப்படுத்துவதில் பின் நிற்பதாகவே தோன்றுகிறது.
”சம்பளப் பிரச்சினை தீர்க்கப்பட்டது”  என்ற செய்திக்கு கொடுத்த முக்கியத்துவத்தை இவர்கள் ஏன் கல்வியாளர்களின் பிரச்சினைகளுக்கு கொடுக்க மறுத்துவிட்டனர் என்பது புரியவில்லை. இதையெல்லாம் விடுவோம்.. இப்போது ’எல்லாம் சரிவந்து விட்டது’ என்று பலரும் நினைப்பது போல் எல்லா நிபந்தனைகளுக்கும் அரசாங்கம் தலையசைத்து விட்டதா..? இந்தக் கேள்விக்கு யாரிடமும் இன்று சரியான பதில் இல்லை. இந்த இறுதித் தீர்மானங்கள் பற்றி எந்தவொரு சகோதர சங்ககங்களுக்கும் அறிவிக்கப்படவில்லையா..? அல்லது தெளிவு படுத்தியது போதாமல் உள்ளதா..? இப்படி பல கேள்விகளுக்கு விடை இல்லாமலையே இத்தொழிற்சங்கப் போராட்டம் தற்காலிக முடங்கு நிலையை அடைந்துள்ளது.

மேலும் கல்வியாளர்கள் பட்டியலில் உள்ள தற்காலிக உறுப்பினர்கள் பற்றி எந்த ஒரு வாக்கியத்தையும் அரசாங்கத்தின் அறிவித்தல் எனக் காட்டப் பட்ட அறிக்கையில் காணப்படாததையிட்டு அலட்டிக் கொள்ள யாருமே விரும்பவில்லை போலும்... இவர்களும் இத்தொழிற்சங்கப் போராட்டத்தில் பங்கெடுத்திருந்தனர் என்பது குறிப்பிடவேண்டிய விடயம். இப்பொழுது சகல கல்வியாளர்களும் எதிர்பார்த்திருக்கும் ஒரே விடயம் அரச சுற்றறிக்கை. இச்சுற்றறிக்கை வெளிவந்தவுடன் சகல கேள்விகளுக்கும் விடை தெரிய வருமா..? என்பதும் தற்போது கூறமுடியாமல் இருக்கிறது. இறுதி நேரத்தில் சில பல்கலைக்கழகங்கள் தங்கள் கல்வி நடவடிக்கைகளை மீளத்தொடங்கியமை தொழிற்சங்க நடவடிக்கையை பாதிக்கும் என்பதனால் கூட தொழிற்சங்க நடவடிக்கை முடிவுக்கு கொண்டுவரப் பட்டிருக்கலாம்.

எது எவ்வாறெனினும், நியாயமான இப்போராட்டம், இருட்டடிப்புச் செய்யப்படாமல் நியாயமாகவே முடிவடைய வேண்டுமென்பதே பலரின் எதிர்பார்ப்பாகும். எனவே, பணி முடக்கம் அமுலில் இருந்த காலப்பகுதியில் இருந்த தொடர்பாடல் நிலை தற்போதைய நிலையிலும் காணப்பட்டால், சங்கத்தின் சகல நடவடிக்கைகளும் வெற்றியடையும் என்பதில் ஐயமில்லை.


Listen
Read phonetically

செவ்வாய், 26 ஜூலை, 2011

தகவலும் தொடர்பாடல் தொழிநுட்பமும் - முன்னோடிப் பரீட்சை

 இன்று(26-07-2011) யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தின் வரலாற்றில் முக்கியமானதொரு நாள். வன்னிப் பிராந்தியத்தின் மாபெரும் கல்விக்கழகமாகவும், ஆராய்ச்சி சாலையாகவும் விளங்குகின்ற வவுனியா வளாகம் சமூகத்திற்கு ஆற்றி வருகின்ற சேவைகள் அளப்பரியன. அவ்வழியில் நடைபெற்ற முக்கியமான மற்றுமொரு சேவையாக இம்முறை க.பொ.த(உ.த) பரீட்சைக்கு தோற்றவிருக்கிற மாணவர்களுக்காக இன்று நடாத்தப்பட்ட முன்னோடிப் பரீட்சையைக் கருதலாம்.

இலங்கை கல்வித் திணைக்களத்தின் புதிய பாடத்திட்டங்களின் படி அறிமுகப்படுத்தப்பட்ட பாடங்களுள் ஒன்றே தகவலும் தொடர்பாடல் தொழிநுட்பமும் ஆகும். இந்த ஆண்டுதான் இதற்கான முதலாவது அரச பரீட்சை நடைபெறவுள்ளது. இந்த நிலையில் வவுனியா மாவட்ட மாணவர்களும் இந்த பாடத்தை தங்களுடைய பிரதான பாடங்களுள் ஒன்றாக வரித்துக் கொண்டார்கள். தமிழ் மொழியில் போதுமான வளமின்மை, பயிற்றப்பட்ட ஆசிரியர் பற்றாக்குறை என்பவற்றுக்கு மத்தியில் இப்பாடத்தை இம்மாணவர்கள் தெரிவு செய்தது இம்மாணவர்களின் மனத் தைரியத்தையே காட்டுகிறது. எப்படியோ கஷ்டப்பட்டு இரண்டு வருடங்களைப் பூர்த்திசெய்தார்கள். எனினும் சில பாடப் பரப்புகளின் மீதான அவர்களின் சந்தேகங்களைத் தீர்க்க பாடசாலைகளால் முடியாதிருந்தது. இதன் போதுதான் பாடசாலை அதிபர் ஒருவர் மூலமாக வவுனியா வளாகத்தின் பெளதீக விஞ்ஞானத் துறையின் அப்போதைய தலைவராக இருந்த கலாநிதி. எஸ். கிருஷ்ணகுமார் அவர்களுக்கு இது பற்றி அறிவிக்கப்பட்டது. அக்கணம் முதல் வவுனியா வளாகம் இதற்காக ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் குறியாக இருந்தது.

மிகக்குறுகிய காலத்தில் முன்னோடிப் பரீட்சையொன்றை நடாத்துவதற்கான சகல ஒழுங்குகளையும் மேற்கொண்டனர். நிச்சயமாக தகவல், தொடர்பாடல் தொழிநுட்பம் சம்பந்தமாக தகவல்களை தமிழில் வழங்குவதென்பது மிகக் கடினமானதொரு பணியாகும். இப்படியான பாரிய பணியை வழங்குவதற்கு ஒருங்கிணைப்பாளராக கலாநிதி. எஸ். கிருஷ்ணகுமார் அவர்களும் நிகழ்ச்சித்திட்டப் பொறுப்பாளராக திரு. ரீ. ஜெயமுகன் அவர்களும் பணியாற்றியிருந்தனர். மிக முக்கியமாக வவுனியா வளாகத்தில் செய்முறையாளர்களாகக் கடமையாற்றும் கிருஷாந்த், முகமது ரிஃப்தி, சத்யபிரியா, கயானன், அகிலா, நிஷாந்தி, ஆர்த்தி, பிரியதர்சன் என்போர் மிகப்பாரியதொரு பங்களிப்பை வழங்கியிருந்தனர். இன்று மாலை பரீட்சை முடிவடைந்ததும் மாதிரி விடைகள் அம்மாணவர்களின் ஆசிரியர் மூலமாக வழங்கப்பட்டது.

இறுதி நிகழ்வின்போது வளாக முதல்வர் திரு. ஆர். நந்தகுமாரன் அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றினார். பல்தேர்வு வினாக்கள், மற்றும் பல்கலைக்கழக அனுமதிக்கான உளச்சார்பு பரீட்சையின் முக்கியத்துவம் என்பவற்றை முதல்வர் தமது உரையில் வலியுறுத்தினார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் கலாநிதி. எஸ். கிருஷ்ணகுமார் அவர்கள் தமதுரையில், பிரயோக விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதி திரு. எஸ். குகனேசன் அவர்கள் தமது நிகழ்ச்சிக்கு ஆதரவும், அனுமதியும் வழங்கியமைக்கு நன்றி தெரிவித்தார். மேலும் முதல்வர், செய்முறையாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் ஏனையோருக்கும் தமது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார். மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்நிகழ்வில் ஆசிரியர், மாணவர், நிகழ்ச்சித்திட்ட குழு என்போரும் தமது கருத்துக்களைத் தெரிவித்துக்கொண்டனர்.

ஆக மொத்ததில் மிகப் பயன்பாடானதொரு சேவையை வவுனியா வளாகம் இன்று வழங்கியிருந்தது. இந்த அர்ப்பணிப்பு நிறைந்த சேவைக்கு தனது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் வில்லொளி தெரிவித்துக்கொள்கிறது.

திங்கள், 25 ஜூலை, 2011

த.தே.கூ எம்மக்களுக்கு என்னதான் செய்யப் போகிறது..? - திருக்கோவில், காரைதீவு


ஒத்திவைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் கடந்த ஜூலை 23 ஆம் திகதி நடைபெற்றது. நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் 45 சபைகளின் அதிகாரத்தைக் கைப்பற்றி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அமோக வெற்றி பெற்றுள்ளது.இத்தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சி வடக்கு, கிழக்கிலுள்ள 18 உள்ளூராட்சி சபைகளையும், தமிழர் விடுதலைக் கூட்டணி 02 சபைகளையும் வெற்றி பெற்றுள்ளது. இத் தேர்தலில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும், மக்கள் விடுதலை முன்னணியும் பாரிய வாக்கு சரிவுக்கு முகம் கொடுத்து சகல உள்ளூராட்சி சபைகளிலும் படுதோல்வி அடைந்துள்ளன.
இதேநேரம் அம்பாறை மாவட்டத்தில் இரு உள்ளூராட்சி சபைகளையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.

திருக்கோவில் பிரதேச சபையில் த.தே.கூ 7 ஆசனங்களையும், ஐ.ம.சு.கூ, ஐ.தே.க என்பன தலா ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியிருக்கின்றது. கடந்த தேர்தலையும் விட அதிக வாக்குப் பதிவு நடைபெற்ற நிலையிலும், தமது மொத்த வளங்களை அரசு பயன்படுத்திய நிலையிலும் ஒரு ஆசனத்தை மட்டும் இங்கு பெற் முடிந்தது, அரசு மீதான மக்களின் வெறுப்பையே பிரதிபலிக்கின்றது. இதை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வெற்றி என்று கருதுவதானது ஆரோக்கியமான முடிவன்று.

இதனிலும் பார்க்க காரைதீவு பிரதேச சபை மக்கள் ஐ.ம.சு.கூ இற்கு எந்தவொரு ஆசனமும் கிடைக்காத ஒரேயொரு உள்ளூராட்சி சபையென்ற பெருமையைப் பெற உதவியிருக்கிறார்கள். இங்கு இலங்கை தமிழரசுக் கட்சி 4 ஆசனங்களையும், முஸ்லிம் காங்கிரஸ் ஒரு ஆசனத்தையும் கைப்பற்றி இருக்கின்றது. 

அம்பாறை மாவட்டத்தில் இவ்விரு பிரதேசங்களும் தமிழர்களைச் செறிவாகக் கொண்ட பிரதேசங்கள். இவ்விரு பிரதேசங்களுக்கும் பொருத்தமான தமிழ் தலைவர்கள் இல்லாமையே மக்களின் நெடுங்கால குறைபாடாகும். பெரும்பான்மைக் கட்சிகளை ஆதிக்கம் செலுத்த விடாமல் நெடுநாட்களாக இப்பிரதேச மக்கள் வாக்களித்து வருகின்றனர். இதன் காரணமாகவே த.தே.கூ வெற்றி பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வட இலங்கையில் கூட பேரினவாத கட்சிகளால் சபைகளைக் கைப்பற்ற முடிந்திருக்கிறது. ஆனால் திருக்கோவில், காரைதீவு பிரதேசங்களில் அது நடக்குமாற் போல் தென்படவில்லை.


த.தே.கூ இம்மக்களுக்கு என்னதான் செய்துள்ளது..? இனி என்னதான் செய்யப் போகிறது..? தமிழ் மக்களை காலம் காலமாக ஏமாற்றி அரசியல் வியாபாரம் நடாத்தி வரும் இவர்கள் மீண்டும் தங்களின் வக்கிர நோக்கத்தை தேர்தல் விஞ்ஞாபனம் எனும் போர்வையில் தமிழர்களே ஒன்றுபடுங்கள் இதனாலே தமிழர்களின் ஒற்றுமையை உலகுக்குக் காட்டலாம் எனக் கூறினர், காலத்துக்குக் காலம் மாறிமாறி வரும் பேரினவாத சிங்கள அரசாங்கங்களுடன் பின் கதவால் சென்று சொந்த தேவைகளைப் பூர்த்தி செய்து வரும் இச் சுயநல அரசியல்வாதிகள் மக்களுக்கு செய்யப்போகும் அபிவிருத்திப் பணிதான் என்ன?

எவருக்கும் அஞ்சாமல் தமிழீழ விடுதலைப் புலிகள் எனும் அமைப்பை வழி நடத்தி வந்த வே.பிரபாகரனுக்குப் பின்னால் பெரும்பான்மை தமிழர்கள் இருந்த போதிலும், அந்த ஒன்று கூடலினால் எதுவும் சாதிக்க முடியாமல் அழிவுகளைச் சந்தித்தமை தான் வேதனையின் உச்சம்.
நன்றி-களத்துமேடு
எனவே, திருக்கோவில், காரைதீவு பிரதேச சபைகளில் வெற்றி பெற்ற அரசியல்வாதிகளே... நாங்கள் எப்போதும் அரசியல்வாதிகள் தான் என்று நிரூபிக்காமல் இப்பிரதேச மக்களின் அபிவிருத்திக்காக சிறிதளவாவது பாடு படுங்கள் என வில்லொளி தயவாகக் கேட்டுக் கொள்கிறது.